Thursday, June 6, 2019

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை; எப்படி விண்ணப்பிப்பது? சென்னை ஆட்சியர் அறிவிப்பு


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2019-ஆம் ஆண்டிற்கான (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஜூன் 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில், கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், சு.மு.நகர், கிண்டி (மகளிர்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.

இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து பயிற்சி பெறவும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 2019 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான தேதி விவரம் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூன் 15 ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News