இந்திய கடற்படையில் இலவச பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம், கோர்ஸ் காமென்சிங் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
Officers in Executive (யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம்) பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ்,மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ.56,000 முதல் ரூ.1,10,700 வரை வழங்கப்படும்.
உடல்தகுதி:
குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.
பார்வைத்திறன்:
எக்சிகியூட்டிவ் பணிக்கு பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பணிக்கு பார்வைத்திறன் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி) மூலம் நடத்தப்படும். நிலை 1, நிலை 2 என இரு நிலை எழுத்துத்தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு, படங்களை பிரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உள்வியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:27.06.2019