Monday, June 3, 2019

இன்ஜினியரிங் ரேண்டம் எண் இன்று பிற்பகல் வெளியீடு

இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று பிற்பகல் இணையதளம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 2ம் தேதி தொடங்கி, மே 31ம் தேதி முடிந்தது. www.tndte.gov.in, www.tneaonline.in இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.



விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரேண்டம் எண் இணையதளம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தரவரிசைப்பட்டியல் வெளியீட்டின்போது எத்தனை பேரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் முறை பயன்படுத்தப்பட்டது என்று தெரியவரும்.

மாணவர்கள் தங்களின் ஜூன் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்களில் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது
ஜூன் 20ம் தேதி சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 3ம் தேதி தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலான கவுன்சலிங்கும் தொடங்குகிறது. பொதுப்பிரிவு இடங்களுக்கு ஜூலை 28ம் தேதிக்குள் இணையதளம் மூலம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



அதே போல், தொழிற்கல்வி பிரிவு(வொக்கேசனல்) மாணவர்களுக்கு ஒற்றை சாரள முறையில் ஜூலை 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூலை 29ம் தேதி பிளஸ்2 தேர்வில் சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், காலியாக உள்ள எஸ்சி, எஸ்சிஏ பிரிவு இடங்களுக்கு ஒற்றை சாரள முறையில் நேரடி கவுன்சலிங் நடைபெற உள்ளது

Popular Feed

Recent Story

Featured News