தற்போது உலகம் டிஜிட்டல் யுகமாக சென்று கொண்டிருப்பதால், அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நம்மளுக்கு கால் செய்வோர்களை அடையாளம் காண வேண்டி ட்ரூகாலர் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி தான் தற்போது, நமக்கு யார் போன் செய்கின்றார்கள் என்று தெரிந்து கொண்டு வருகின்றோம். இந்த செயலியை நாம் தற்போது ஏராளமானோர் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,. தற்போது, ட்ரூகாலரில் புதிதாக இலவசமாக கால் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரூகாலர் வசதி: ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஏராளமானோர் தற்போது, தங்களுக்கு யார் போன் செய்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அனைவரும் ட்ரூகாலர் வசதியை பயன்படுத்த துவங்கினர்.
இந்த வசதியை உலகம் முழுக்க உள்ள மொபைல் பயனாளர்கள் பரவலாக பயன்படுத்த துவங்கி விட்டனர். ட்ரூ காலர் பேமெண்ட்: இதன் பிறகு டிஜிட்டல் பேண்மெண்ட் முறைக்காக ட்ரூகாலரில் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மற்ற மொபைல் எண்கள் மற்றும் வங்கிளுக்கு அடுத்த நெடியிலே டிஜிட்டல் மூலமாக பணத்தை செலுத்த முடியும். இதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் மூலம் கூகுள் பே, பேன் பே, யுபிஐ ஐடிகளுக்கும் எளிதாக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். ட்ரூகாலர் எஸ்எம்எஸ் வசதி: இதனிடையே ட்ரூகாலர் மூலம் நாம் எஸ்எம்எஸ் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாம் போனில் உள்ள எஸ்எம்எஸ் ஆப்சனுக்கு செல்லாமலையே ட்ரூகாரில் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி இருப்பதால், அனைவரும் வரவேற்றனர். இலவமாக கால் செய்யலாம்: ட்ரூகாலர் வாய்ஸ் என்னும் புதயி அம்சம் மூலம் ட்ரூகாலர் பயன்படுத்தும் பயனாளர்கள் இணைய வாய்ஸ்கால் சேவையை பயன்படுத்தலாம். மொபைல் டேட்டா மட்டும் அல்லாமல் வை-பை மூலம் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
விரைவில் அறிமுகம்: தற்போதைய சூழலில் சோதனைக் கட்டத்தில் தான் ட்ரூகாலர் வாய்ஸ் கால் அம்சம் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட தளங்களுக்கும் இந்த ஆப்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாகும் போது, கால் லாக் ( call log) எஸ்எம்எஸ், கான்டாக்ட்ஸ் லிஸ்ட் ஆகிய ஆப்பன் மூலம் ஷார்ட்கட் ஆக உபயோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்ட உள்ளது. வசதியை பெறாலம்:
முதலில் ட்ரூகாலர் ச்பஸ்க்ரைப் செய்திருந்தால் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் தற்போது ட்ரூகாலர் ஆப் பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் இந்த வசதியை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது