Friday, June 28, 2019

அதிக உப்பு, கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுப் பாக்கெட்களில் சிவப்பு லேபிள்


பேக் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களில் அதிக கொழுப்பு, இனிப்பு, உப்பு இருந்தால் அதன் லேபிலின் மீது சிவப்பு நிறக் குறியிட்டு நுகர்வோருக்கு அடையாளப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேக்கேஜ் செய்யப்பட்ட சிப்ஸ், சூப், பிஸ்கட், ஜூஸ் போன்றவற்றின் பாக்கெட்டின் மீது கொழுப்பு, உப்பு, சர்க்கரை அளவு அதிகமிருப்பதைக் குறிக்கும் படி சிவப்பு நிற லேபிள் பதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய வரைவை வகுத்துள்ளது.



இதற்கு அனைத்திந்திய உணவு பதப்படுத்துவோர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர் விரும்பும் சுவைக்கேற்பவே உணவுப் பொருட்களில் கோரப்பட்டதை விட அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை சேர்க்கப்படுவதாகவும், இது உற்பத்தியாளரின் விருப்பம் அல்ல என்றும் கூறியுள்ளது. வரும் வாரத்தில் லேபிலிங் தொடர்பான வரைவு மீது மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்தைக் கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News