Tuesday, June 18, 2019

தவிச்ச வாய்க்கு இங்க தண்ணீர் இல்லை..! பள்ளி அரை நாள் மட்டும் செயல்படும்.!நிர்வாகம்


தமிழகம் முழுவதும் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.
இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது.ஏரி,குளம்,அணைகள் என அனைத்தும் வற்றி வறண்டு போய்விட்டது.மக்கள் தண்ணீர் ,தண்ணீர் என்று கூக்குரல் எழுப்பி ஒரு குடம் தண்ணீயாவது கொடுங்க என்று சாலையோரங்களில் காலி குடங்களோடு அலைந்து திரிக்கின்றனர்
.குடிப்பதற்கே தண்ணீ இல்ல இதுல எங்க குளிக்க என்று மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வேதனை கொள்கிறது
இந்நிலையில் பள்ளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல மாணவர்களும் தங்களுடைய சுய தேவைக்கு பயன்படுத்தத முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.


பள்ளி நிர்வாகம் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் கை விரிக்கும் சூழல் நிலவுவதால் மானவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தற்போது பள்ளி வேலை நாளை குறைத்து உள்ளது.
அதன் படி தற்போது குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியான விவேகானந்த வித்யாலயா பள்ளியில் படிக்கும் மானவர்கள் அரை நாள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் இனி பள்ளி அரை நாள் மட்டுமே செயல்பட உள்ளதாக அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி தெரியப்படுத்தி உள்ளது.
ஒரு பக்கம் பள்ளி பாதி நாளாக குறைக்கப்பட்டு விட்டது மறுபக்கம் பணியை வீட்டில் பாருங்கள் என்று நிருவனங்கள் தங்களது பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளது.


இதற்கிடையில் உணவகங்கள் பல இழுத்து மூடப்படுவதாக அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.கல்லூரிக்கு விடுமுறை எடுத்து மாணவர்கள் குடி தண்ணீர் எடுத்து வருகின்றனர் என்று தமிழகத்தின் தலைநகரமே தண்ணீர்க்கு தவித்து வருகின்றது.

Popular Feed

Recent Story

Featured News