உதவி வேளாண் அலுவலர் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை இன்றும் நாளையும் ஆன்லைனில் பதி வேற்றம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உதவி வேளாண் அலுவலர் தேர்வுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள விண் ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையத்தில் 25, 26 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) ஆன்லைனில் பதிவேற் றம் செய்யலாம்.
குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர் களுக்கு தேர்வுமுறையில் விருப்ப மில்லை என கருதி அவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன