வரலாற்றில் இன்று 06.07.2019 - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 6, 2019

வரலாற்றில் இன்று 06.07.2019

சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1044 – புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான்.
1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1483 – மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான்.
1535 – சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
1560 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1785 – டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.
1885 – பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.


1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1893 – அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1908 – ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.
1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
1939 – ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
1944 – கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.
1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1966 – மலாவி குடியரசாகியது.
1967 – நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரை ஆரம்பித்தனர்.
1975 – கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
2005 – லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.



பிறப்புகள்

1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)
1832 – முதலாம் மாக்சிமிலியன் (இ. 1867)
1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
1907 – ஃபிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)
1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)
1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர்
1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)
1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)
1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி
1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்
1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்
1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்
1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை
1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை
1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்



இறப்புகள்

1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)
1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)
1893 – மாப்பசான், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1850)
1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)
1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)
1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)
1986 – ஜெகசீவன்ராம், 4வது இந்திய துணைப் பிரதமர் (பி. 1908)
2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1913)
2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932]])

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (பெரு)
விடுதலை நாள் (மலாவி, 1964)
விடுதலை நாள் (கொமொரோஸ், 1975)

Post Top Ad