மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையை கல்வி செயலியில் பதிவு செய்வது 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இதற்காக இயக்குனர் கண்ணப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார்.மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை செயலியில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி பள்ளி நாட்களில் தினமும் காலை 9:30 மணிக்குள், பகல் 1:45 மணிக்குள் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதில் துாத்துக்குடி உட்பட சில மாவட்டங்கள் 100 சதவீதத்தை எட்டியுள்ளன. அந்த வரிசையில் மதுரையும் ஒரு வாரமாக தொடர்ந்து 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இதற்காக மதுரை கல்வித்துறையை இயக்குனர் பாராட்டினார்.
முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் 1553 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தினம் 2 லட்சத்து 90,942 மாணவர், 25 ஆயிரம் ஆசிரியரின் வருகை கல்வி செயலியில் பதிவு செய்யப்படுகின்றன. செயலியில் பதிவான விபரம் காலை 10:00 மணிக்கும், பகல் 2:00 மணிக்கும் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இன்டர்நெட் பிரச்னை உள்ள கிராம பள்ளிகளில் 'ஆப் லைனில்' வருகையை பதிவு செய்து, நெட் வசதி கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பதிவுகளை கண்காணிக்க, தொழில்நுட்ப பிரச்னைக்கு உடன் தீர்வு காணவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், தலைமையாசிரியர் முயற்சியால் தான் 100 சதவீதம் இலக்கை எட்ட முடிந்தது என்றார்.