Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 11, 2019

2 முதல் 6ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் தெளிவாக கற்பித்தல் பயிற்சி

2 முதல் 6ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் தெளிவாக கற்பித்தல் பயிற்சி 32 மாவட்டங்களிலிருந்து 64 ஆசிரியர்கள் பங்கேற்பு

ஜூலை 10: தமிழ்நாடு புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2, 3, 4, 5 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான தமிழ்ப்பாடநூல் புதிதாக வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் தெளிவாக கற்பிக்க ஏதுவாக மாநில கருத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் திருச்சி கேம்பியன் பள்ளியில் நேற்று நடந்தது.திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் பால் முன்னிலை வகித்தார். சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் மணிவேல் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.



திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி, உதவித் திட்ட அலுவலர் முத்துச்செல்வன், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பயிற்சித்துறை தலைவர் சுந்தர்ராஜன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். சென்னை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் உஷாராணி மற்றும் ஆசிரியர் பயிற்சி அளித்தனர். மாவட்டத்துக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களிலிருந்தும் 64 பேர் பங்கேற்றனர். இவர்கள் மாவட்ட கருத்தாளர்களை உருவாக்குவர். இன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நாளை பயிற்சி நடக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News