Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 20, 2019

வரலாற்றில் இன்று 20.07.2019

சூலை 20 (July 20) கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் ஸ்டேர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினான்.
1618 – புளூட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.
1656 – பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவ் மன்னனின் சுவீடனின் படைகள் வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து-லித்துவேனியப் படைகளை வென்றனர்.
1810 – நியூகிரனாடாவின் பகோட்டா (கொலம்பியாவின் தலைநகர்) நகர மக்கள் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.
1922 – பன்னாட்டு அமைப்பு (League of Nations) ஆபிரிக்காவில் டோகோலாந்து பிரான்சுக்கும், தங்கனீக்கா ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.
1924 – அமெரிக்க உதவி தூதுவர் “ரொபேர்ட் இம்ரி” சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் தெஹ்ரான் நகரில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1935 – இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
1940 – டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஒருவனால் ஹிட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாம் தீவை அடைந்தன.


1947 – பர்மியப் பிரதமர் ஓங் சான் மற்றும் 7 அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஊ சோ கைது செய்யப்பட்டார்.
1948 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 தலைவர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டனர்.
1949 – 19-மாத அரபு – இசுரேல் போரின் பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.
1951 – ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1953 – யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது.
1954 – வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும் உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது.
1960 -இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் தலைவராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.
1960 – கொங்கோவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த பெல்ஜியம் ஐநா பாதுகாப்பு அவையில் வாதாடியது. கொங்கோ அரசு சோவியத் உதவியை நாடியது.
1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.


1964 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் “காய் பே” நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 30 குடிமக்களையும் கொன்றனர்.
1969 – அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் காலடி வைத்தனர்.
1969 – உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கொந்துராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1974 – சைப்பிரசில் அதிபர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.
1976 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தாய்லாந்தில் இருந்து முற்றாக வெளியேறினர்.
1976 – வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.
1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1980 – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
1982 – ஐரியக் குடியரசு இராணுவத்தினரினால் லண்டனில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொது மக்கள் படுகாயமடைந்தனர்.
1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1996 – ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.



பிறப்புகள்

கிமு 356 – மகா அலெக்சாந்தர், கிரேக்க மன்னன் (இ. கிமு 323)
1822 – கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் (இ. 1884)
1919 – சேர் எட்மண்ட் ஹில்லறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர், நியூசிலாந்தின் மலையேறி
1923 – மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி (இ. 2002)
1929 – ராஜேந்திர குமார், இந்திய நடிகர் (இ. 1999)
1975 – ரே ஏலன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1937 – மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்தவர் (பி. 1874
1973 – புரூஸ் லீ, தற்காப்புக்கலை வல்லுநர், ஹாலிவுட் நடிகர் (பி. 1940)



சிறப்பு நாள்

அனைத்துலக சதுரங்க நாள்
கொலம்பியா – விடுதலை நாள் (1810)
வடக்கு சைப்பிரஸ் – அமைதி மற்றும் விடுதலை நாள்

Popular Feed

Recent Story

Featured News