Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 23, 2019

'கேட் 2020' தேர்வு அறிவிப்பு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கி போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப மைய (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பு (எம்.டெக்), மற்றும் பிஎச்.டி. படிப்பதற்கு இது ஒரு தகுதித் தேர்வாக பின்பற்றப்படுகிறது.

அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்த தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களை நிரப்புவது உண்டு.

பல தனியார் நிறுவனங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

எனவே வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ஒரு தேர்வாகவும் இந்த தேர்வு மதிப்பு பெறுகிறது. 2019-க்கான கேட் தேர்வை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் நடத்தியது.



2020-ம் ஆண்டுக்கான கேட் தேர்வை டெல்லி ஐ.ஐ.டி. நடத்த உள்ளது.

என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் பட்டப்படிப்புகள், முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750-ம், மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.



24-9-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

1-10-2019-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் கூடுதல் அவகாசத்திற்குள் விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு மையங்களை மாற்றி விண்ணப்பிக்க நவம்பர் 15-ந்தேதி வரை அனுமதிக்கப்படுகிறது.

இதற்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். விண்ணப்பிக்கத் தொடங்குபவர்கள் தேவையான சான்றுகளை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது பற்றிய விவரங்களை gate.iitm.ac.in என்ற இணையதள பக்கம் வழியாக அறிவிப்பின் முழு விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்ப பதிவை தொடங்கவும்.

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top