Friday, July 26, 2019

போட்டி தேர்வு மூலம் 353 மருந்தாளுநர்கள் நியமிக்க அரசு முடிவு

மருந்தாளுநர்களை இந்த ஒரு முறை மட்டும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத் துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித் துள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு மருத்து வமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு நேரடி நியமனம் மூலம் 353 மருந்தாளுநர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இதற்கான அறி விக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வுவாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இதையடுத்து, 23 ஆயிரத்து 8 பேர் பேர் ஆன்லைனியில் விண்ணப்பித் திருந்தனர்.



அரசுக்கு கருத்துரு இவர்களில் பார்மஸி பட்டப் படிப்பு மற்றும் பார்மஸி டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு தனித் தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இரு படிப்புகளுக்கும் மதிப்பெண் முறை மாறுபடுவதால், சிக்கல் ஏற்பட்டது. எனவே, போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்வதற்கு, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம், அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, இந்த ஒருமுறை மட்டும் மருந்தாளுநர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News