Wednesday, July 3, 2019

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகே செய்யப்படுவது ஏன்?: கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவது ஏன் என்பது குறித்து பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசியது:
ஆசிரியர்களை ஓராண்டில் பணியிட மாறுதல் மேற்கொள்ளலாம் என்று திமுக ஆட்சியில் இருந்தது. இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகே பணியிட மாறுதல் என மாற்றப்பட்டுள்ளது. இது சரியான முறை அல்ல என்றார்.


அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டுக் கூறியது: பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், 6 மாதங்களில் மீண்டும் பழைய இடத்துக்கே வர விரும்புகின்றனர்.

அதன் காரணமாகவே, ஓராண்டுக்குள் இடமாறுதல் பெறலாம் என்பதை 3 ஆண்டு காலமாக மாற்றி வைத்துள்ளோம் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News