Saturday, July 6, 2019

பள்ளி வேலை நேரங்களில், ஆலோசனை கூட்டம் நடந்த கூடாது இயக்குநர் செயல்முறை நாள் 5-07-2019

சென்னை:'பள்ளி வேலை நேரங்களில், ஆலோசனை கூட்டம் நடந்த கூடாது எனஆசிரியர்களை, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, இந்த விபரங்களை கேட்டால், இணையதள விபரங்களை, மின்னணு முறையில் அனுப்பி விடலாம். இந்த விபரங்களுக்காக, ஆசிரியர்களை நேரில் அழைத்து, கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படாது.அதேநேரம், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால், மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம்.


அதனால், பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது. மேலும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விபரங்களை கேட்கவும், அளிக்கவும், பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தேவைப்படும் விபரங்களை, இ - மெயில் வழியே அனுப்பினால், பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது. ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி, ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Popular Feed

Recent Story

Featured News