தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பாதிக்கும் மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செய்தது. சம்பள உயர்வு தொடங்கி, சங்கடம் தீர்க்க வலியுறுத்துவது வரை, வித விதமான போராட்டங்கள். இப்படிப் பட்டட போராட்ட வீரர்கள் தற்போது இருக்கிறார்களா என்று யோசிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை பற்றிய எந்தவிதமான விவாதங்களும் தொடங்கவே இல்லை.
காற்றுள்ள போதே துாற்றிக் கொள் என்பது போல, புதிய கல்விக் கொள்கை வரைவு பட்டியல் வெளியிட்டு, அது பற்றிய கருத்துக் கூற, மத்திய அரசு கால அவகாசம் தந்துள்ளது. இந்த காலட்டத்தில், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் வெளிப்படையான விவாதங்கள் நடத்தி, அது பற்றிய கருத்துகளை உருவாக்கி, தேவை எனில் திருத்தங்களை கூறவேண்டும். அதை விடுத்து, இது அறிமுகம் செய்த பின்னர் கூச்சல் போடுவதோ, மாற்றத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதோ வீண் வேலை.
பியுசி முடிவுக்கு வந்து, பிளஸ் 2 அறிமுகம் ஆன காலத்தில் ஆங்கிலப்புலமை கொண்ட பெரியவர்கள் தங்களை ஓல்ட் எஸ்எஸ்எல்சி என்று பெருமை பொங்க மார்தட்டிக் கொண்டார்கள். இன்றைய கல்விக் கொள்கையில் பல இன்ஜினியர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கு அவர்களின் தொழில்நுட்பட அறிவை மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் புரிய வைக்க இயலாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தொடக்கப்பள்ளிகளில் செயல்முறைக் கல்வி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கற்றல் அட்டைகள் போன்றவை அரசு பள்ளிகளில் போதுமானதாக இருக்கிறதா என்றால், ஆம் என்று சொல்ல இயலவில்லை. இப்படி கற்பித்தலுக்கு தேவையான கருவிகள் கூட இல்லாமல் தான் பல பள்ளிகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் வலிமை பெற்றுக் கொண்டே வருகிறது. 2018-2019ம் கல்வியாண்வில் 3,7459 அரசு பள்ளிகள், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இது தவிர, சிபிஎஸ்சி, மெட்ரிக், இன்டர் நேஷனல் பள்ளி, பிளே ஸ்கூல் என்று உலக நாடுகளில் என்ன என்ன பெயர் இருக்கிறதோ அதைத்து வகை பள்ளிகளும் தமிழகத்தில் உள்ளன. இவை அதனைத்தும் தனியார் நடத்துவது. இவற்றை அரசு வேடிக்கை பார்க்கலாமே தவிர்த்து பாடதிட்டங்களில் தலையீடு செய்ய இயலாது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட போது, ஒரே நாளில் பல மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாறிவிட்டன. இந்த மாயம் எப்படி நடந்தது என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தான் வெளிச்சம். இன்று பெற்றோரிடம் பணம் இருந்தால், எந்த வகையான கல்வியையும் வாங்கி விடலாம்.
கிராமப்புற மாணவர்கள் தான், தரமான கல்வி பெற முடியாமல் தவிக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் ரேபோட் பற்றிய அறிவியலை பள்ளியில் படிக்கிறான். கிராமப்புற மாணவனோ ரஜினி வாழ்க்கையில் எந்த விதத்தில் உயர்ந்துள்ளார் என்று படிக்கிறான். இந்த அளவிற்கு பாடத்திட்டத்தில் வேறு பாடு உள்ளது.
பெரும்பாலும் புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்கள், ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் கண்ட குப்பையும் கல்வியாக்கப்படுகிறது. ஆளும்கட்சியினருக்கு புகழ்மாலையாக அது மற்றப்படுவதால் யாரும் கண்டு கொள்வது இல்லை.
கல்வி என்பது மிகப் பெரிய வர்த்தக சந்தையாக மாறிவிட்ட நிலையில், இதில் மாற்றம் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. தனியார் எதிர்ப்பு பலமாக இருக்கும். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் அந்த பாடத்திட்டங்கள் திணிக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் இருக்காது.
தற்போதுள்ள நிலையில், தனியார் பள்ளிகளிடம் அரசு பள்ளிகள் அடிப்படை வசதி கோரி பிச்சை எடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய கல்விக் கொள்கை பள்ளி ஆய்வு செய்ய கல்வித்துறை தொடர்புடை ஆசியர்கள், பேராசிரியர்கள், அவர்கள் சங்கங்கள் முன்வராது. அந்த இடத்தை மாணவர் அமைப்புகள் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இது அவர்கள் பிரச்னை அவர்கள் தான் பார்க்க வேண்டும்.
மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சிகளுக்கு வால்பிடிக்காமல் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதத்தை மாவட்டம் தோறும் நடத்தி அது தொடர்பாக கருத்துக்களை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டும். அது தான் வரும் ஆண்டுகளில் அவர்கள் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் அரசியல் சட்டமாக இருக்கும்.