Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 20, 2019

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்

தமிழகத்தில் கம்ப்யூட்டர், தொழில்கல்வி மற்றும் வேளாண் ஆசிரியர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு முதல் கியூ.ஆர்., கோடு உட்பட அதிக இணைய பயன்பாடுள்ள புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஆசிரியர்கள் எளிமையாக கற்பிக்கும் வகையில் அவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாவட்டம் வாரியாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் எணணிக்கை விவரம் கோரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்கல்வி மற்றும் வேளாண் பாட ஆசிரியர்கள் விடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றவுடன் அனைவரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பி.ஜி., ஆசிரியருக்கு மட்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணினிகளை அதிகம் கையாளும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு லேப்டாப் இல்லை என தெரிவிக்கப்பட்டது.



புதிய பாடத்தில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம் பாடங்களை நடத்தும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்காததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எங்கள் பணி முக்கியத்துவம் குறித்தும் அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்கப்பட்டது. உண்மை நிலையறிந்து எங்களையும் பட்டியலில் சேர்க்க இணை இயக்குனர் (தொழில்கல்வி) சுகன்யா உத்தரவிட்டுள்ளார் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News