Monday, July 1, 2019

தமிழ்நாடு அரசின் சின்னமானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி.. தமிழகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு


சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது.
தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.
இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது.


மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று தான் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி கூட்டமாக வசிக்கும் இந்த பட்டாம்பூச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே வசித்து வருகிறது. கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும். இந்த பட்டாம்பூச்சி அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொண்டவை ஆகும். இந்த தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு அர்த்தம் போர் வீரன் என்பதாகும்.


தமிழ்நாட்டின் மாநில பட்டாம்பூச்சியாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாநில மரம், மாநில விலங்கு, மாநில பறவைகள் வரிசையில், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி இனத்தை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள‌து. தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்க வனத்துறை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த‌து

Popular Feed

Recent Story

Featured News