Join THAMIZHKADAL WhatsApp Groups

உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி வழுக்கை விழுவதில் இருந்து உங்களை காப்பாற்றும் பழங்கள் என்னென்ன என்று தெரிஞ்சிக்கோங்க.
பப்பாளி பல மருத்துவ பலன்களை வழங்கக்கூடியது. இதில் அதிகளவு இருக்கும் அமினோ அமிலம், கொலாஜன், வைட்டமின் சி போன்றவை உங்கள் முடி துளைகளை பலப்படுத்துகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை வழங்குகிறது. கொலாஜன் சேதமடைந்த திசுக்களை சரிசெய்யும் போது வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. கிவி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உச்சந்தலையை பாதுகாப்பதுடன் அங்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழுக்கை விழுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் ஜிங்க் முடி வளர்ச்சியை தூண்டுவதுடன் சேதமடைந்த திசுக்களை சரி செய்கிறது. இது எண்ணெய் சுரப்பிகளை பராமரிப்பதுடன் புதிய முடி துளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
கொய்யாப்பழத்தில் ஆரஞ்சை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவது உங்களுக்கு அதன் அதிகபட்ச பலன்களை வழங்குகிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இதனால் உங்கள் முடியின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் அமைப்பு என அனைத்தும் அதிகரிக்கிறது. இது உங்கள் முடியின் அளவை மேம்படுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
கவர்ச்சிகரமான வடிவத்தை தாண்டி ஸ்டராபெர்ரி பல மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. ஸ்டராபெர்ரி வழங்கும் பல முக்கியமான பலன்களில் ஒன்று முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாகும். இதில் அதிகளவு சிலிகா மற்றும் எல்லாஜிக் அமிலம் உள்ளது. இது முடியின் அடர்த்தியை அதிகரிப்பதுடன் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.
முடி உதிர்தல் தொடர்பான அனைத்து தயாரிப்புகளிலும் பீச் பழங்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள்தான். இது வறட்சியை தடுப்பதுடன் முடி வளர்ச்சிக்கு தேவையான எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது. இதன்மூலம் உச்சந்தையில் pH அளவை சரிசெய்வதன் மூலம் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.