புதுச்சேரி: ஜிப்மரில் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஜிப்மர் மருத்துவமனையின் முதல்வர் (கல்வி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், தகுதி வாய்ந்த சவக்கிடங்கு உதவியாளர், குடல்வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு முறை ஆகிய சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஓராண்டு கால அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர் படிப்பில் 20 இடங்கள் உள்ளன.
பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் தொழிற்கல்வியாக எம்.எல்.டி., மற்றும் நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு கால தகுதி வாய்ந்த சவக்கிடங்கு உதவியாளர் படிப்பில், 2 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 படிப்பில், பயாலஜி முடித்த அறிவியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.குடல்வாய் பாதுகாப்பு முறை படிப்பு 3 மாதங்கள் ஆகும். இப்படிப்பில் சேர பி.எஸ்சி., நர்சிங் படிப்புடன் பணி அனுபவம் தேவை. ரத்த சேகரிப்பு முறை படிப்பிற்கு பிளஸ் 2 வகுப்பில் பயாலஜி முடித்திருக்க வேண்டும். ஓராண்டு கால படிப்பு மற்றும் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள், 17 வயது முதல், 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
குடல் வாய் பாதுகாப்பு முறை படிப்பிற்கு, சட்ட விதிப்படி வயது வரம்பு தளர்வு உண்டு. பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 300 உதவித்தொகையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களுடைய விருப்பத்தின் பேரில், மேலும் ஓராண்டு காலம் ஜிப்மர் அவசர சிகிச்சை மையத்தில், மாதம் ரூ. 3,713 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள், ஜிப்மர் இணைய தள முவகரியிலும் (www.jipmer.edu.in) மற்றும் ஜிப்மர் கல்வி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களை வரும் ஆக., 10ம் தேதி மாலை 4:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் அதே மாதம் 19ம் தேதி, ஜிப்மர் அகடமிக் சென்டரில், காலை 8:00 மணி முதல் 9:30 வரையில் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.