Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 24, 2019

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: அடுத்த வாரம் விண்ணப்பம் விநியோகம்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
யோகா - இயற்கை மருத்துவத்தைத் தவிர்த்து பிற பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.


அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. நிகழாண்டில் அப்படிப்புகளுக்கும் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.


அதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top