Join THAMIZHKADAL WhatsApp Groups

கேரளாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான 'மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 366
பணி: ரிகர் - 217
பணி: எலக்ட்ரீசியன் - 149
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிகர் என்ஏசி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் ரிகர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எலக்ட்ரீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.07.2019 ஆம் தேதி அடிப்படையில் 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2019 (உத்தேசிமானது)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய mazagondock.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.