புதுக்கோட்டை,ஜீலை.24: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி அவர்கள் பதவி உயர்வு மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.ராஜேந்திரன், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளி துணை ஆய்வாளர்கள்,முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள் ,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.