Join THAMIZHKADAL WhatsApp Groups
''எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான,திருத்தியமைக்கப் பட்ட புதிய பாடத்திட்டம், இந்த கல்வியாண்டு முதல்நடைமுறைக்கு வருகிறது,'' என, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம், இந்த கல்வியாண்டு நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே இருந்தபாடங்களுடன், சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நிபுணர்களின் உதவியுடன், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., பாடத்திலேயே, 60 மணி நேரம், நோயாளிகளை மாணவர்கள் நேரடியாக சந்தித்து, சிகிச்சை முறைகளை கற்பதற்கான வகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன், இரண்டாம் ஆண்டில் தான், மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நேரடி தொடர்பு இருக்கும் வகையில், பாடத்திட்டங்கள் இருந்தன.மருத்துவ சேவையில், எவ்வாறு நெறி சார்ந்து செயல்பட வேண்டும் என்பது, புதிய பாடத்திட்டத்தில், சமகால சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோயாளிகள், மருத்துவ துறை சார்ந்தவர்கள் மற்றும் சாமானிய மக்களை அணுகும் முறை குறித்தும், கற்பிக்கப்பட உள்ளது. திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு திறம்பட கற்பிப்பதற்காக, பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, சுதா சேஷய்யன் கூறினார்.