Tuesday, July 30, 2019

இனி கல்வி வியாபாரம் இல்லை

புதிய மசோதா தாக்கல் செய்த ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் மாநில மக்களுக்கு நிறைய புது திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். குறிப்பாகக் கல்வி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன் வரிசையில் தற்போது பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் மசோதாவை நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவை இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும்.



இந்த மசோதா பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ``கல்வி வியாபாரம் அல்ல. அது ஒரு சேவை. ஏழ்மையான மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாம் சிறந்த கல்வியைத் தரப்போகிறோம். உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் செயல்பட்ட கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவின் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். கல்விக் கட்டணத்தைத் தாண்டி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியின் தரம், மாணவர்கள் சேர்க்கை போன்றவற்றையும் இந்தக் குழு கண்காணிக்கும்.



#சட்டமன்றத்தில்_பேசிய_முதல்வர்_ஜெகன்_மோகன்_ரெட்டி,

#நம்_சட்டமன்றத்தில்_அமர்ந்துள்ள_பல_அமைச்சர்கள்_சொந்தமாகப்_பள்ளி_கல்லூரிகள்_வைத்துள்ளனர்_அவற்றில்

#LKGUKG_வகுப்புகளுக்குக்_கூட_லட்சக்கணக்கில்_பணம்_வசூலிக்கப்படுகிறது.

இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News