Thursday, July 4, 2019

LIC பாலிசிதாரர்கள் இனி பிரீமியம் கட்ட அலைய வேண்டாம்.. நெட் பேங்கிங்கில் இணைத்துக் கொள்ளலாம்!


ஒரு புறம் இன்ஷூரன்ஸ் என்றாலே அலுத்துக் கொள்ளும் மக்கள், அவ்வாறு இன்ஷூரன்ஸ் போட்டாலும் பிரீமியம் கட்ட அலுவலகங்களைத் தேடி செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் நாட்டின் மிகப் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இனி பிரீமியம் கட்ட அலுவலகங்களையே, எல்.ஐ.சி சேவை மையங்களையோ தேடி அலைய வேண்டாம் என்றும், பாலிசிதாரர்கள் அவரவர் நெட் பேங்கிங்கில் இணைத்து விட்டால் போதும் என்றும் அறிவித்துள்ளது.


அதோடு எல்.ஐ.சி பிரீமியத்தை கட்ட நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கும். அதோடு பலருக்கும் தங்களது பாலிசி பிரீமியம் தேதி நியாபகத்தில் இருக்காது. இதனால் பலரும் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமே. நெட் பேங்கிங் மற்றும் பிரீமியம் செலுத்த விருப்பம் உள்ளவர்கள் இதில் இணைத்துக் கொள்ளலாம்.
இதனால் எதிர்கால பிரீமியம் கூட தானாக செலுத்தப்பட்டு விடும் என்கிறது எல்.ஐ.சி. அதோடு இவ்வாறு வங்கிகள் மூலம் பிரீமியம் செலுத்தப்படும் போது இதற்கான தனிக்கட்டணங்கள் எதுவும் கட்டத்தேவையில்லை. அதோடு ஒரு முறை பணபரிவர்த்தனையில் 50,000 ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.


எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு புது[பித்தல் பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி தளங்களிலும் கிடைக்கும் இன்ஸ்டாபே வசதியை பெற முடியும். இதன் மூலம் எல்.ஐ.சி பாலிசிதாரர் எண்ணிக்கையும் கூடும், அதோடு வங்கிகளிலும் பணபரிமாற்றம் அதிகரிக்கும். இதனால் பணப் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும். இதன் படி திட்டமிடப்பட்ட 24 வங்கிகளில் இருந்து பிரீமியத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


அலாகாபாத், பந்தன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஹெச்.டிஎஃப்.சி,ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ பேங்க், யெஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், தனலட்சுமி வங்கி உள்ளிட்ட 24 வங்கிகள் மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

Popular Feed

Recent Story

Featured News