Tuesday, August 6, 2019

மொபைல் பேங்கிங்: பாதுகாப்பாகப் பயன்படுத்த 10 எளிய வழிகள்!


நம் நாட்டில் டிஜிட்டல்மூலம் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவரும் அதேவேளையில், சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகின்றன. வங்கிப் பரிவர்த்தனை செயலிகளைப்போல, பல்வேறு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்குக் குவிந்து கிடக்கின்றன. பே டிஎம் (PAYTM), கூகுள் பே (Google pay), போன் பே (Phone pay) மற்றும் அமேசான் பே (Amazon Pay) போன்ற எண்ணற்ற செயலிகள் பரிவர்த்தனைக்கு எளிதாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தேநீர் கடை முதல் விமான டிக்கெட் புக்கிங் வரை இதுபோன்ற செயலிகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.


ஆயிரம்தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன்பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாக ஒதுக்கிவிடவே முடியாது என்னும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்தச் சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகையச் சூழலில் பாதுகாப்பாக இருக்கக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை விஷயங்களை மனதில்கொள்ளுங்கள்.

பாதுகாப்பாக இருக்க...


📌1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.


📌2. உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


📌3. பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வை-ஃபையைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை செய்யாதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால், வை-ஃபையை அணைத்தே வையுங்கள்.



📌4. புதிதாக வருகிற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.


📌5. எந்த ஆப்பினை நீங்கள் பயன்படுத்தினாலும் அதைப் பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.


📌6. அடிக்கடி உங்களுடைய கணக்குவழக்குகளைச் சரிபார்த்து, ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.


📌7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.


📌8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.


உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்




📌9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.


📌10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்றவற்றை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Popular Feed

Recent Story

Featured News