Thursday, August 29, 2019

நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்'

நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்' இணைய தளத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் துவக்கி வைத்தார். விழாவில் அமைச்சர் பேசுகையில், 'நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மற்றும் அதற்கான அடித்தளத்தை உறுதியாக்குவது போன்றவற்றை சார்ந்துள்ளது. இதற்கு 'ஷாகுன்' முக்கிய துவக்கமாக உள்ளது. இந்த போர்டல் மூலம் 2.3 லட்சம் கல்வி இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கல்வி கருவூலம் அமைக்கப் பட்டு, நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் தகவல்கள் பார்வைக்கு வைக்கப்படும்என்றார்.மனிதவள மேம்பாட்டு அதிகாரி, கேந்திரியா வித்யாலா, நவோதயா வித்யாலயா, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் இணையதளங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது, என்றார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News