Friday, August 30, 2019

உதவி பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1.82 லட்சம் சம்பளம்

தமிழகத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று வெளியிட்டது.வணிகவியல், பொருளியல், ஆங்கிலம், விலங்கியல், உருது, பயோ கெமிஸ்ட்ரி உட்பட, 73 பாட பிரிவுகளில், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; பாட வாரியான காலியிட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, செப்., 4ல் துவங்குகிறது; 24ல் முடிகிறது.

இந்த பதவிக்கு, குறைந்தபட்சம், 57 ஆயிரத்து, 700 ரூபாய் முதல், அதிகபட்சம், 1 லட்சத்து, 82 ஆயிரத்து, 400 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கு, முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.என்ன தகுதி வேண்டும்?நேரடி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், முதுநிலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும். பேராசிரியர் பணிக்கான, மத்திய அரசின், &'நெட்&' எனப்படும், தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், &'செட்&' எனப்படும், மாநில தகுதி தேர்வை எழுதியிருக்க வேண்டும். அதில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

வழக்கமாக, இதுபோன்ற, அதிக எண்ணிக்கையில், பேராசிரியர்கள் நியமனம் செய்வதாக இருந்தால், தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆனால், இந்த முறை, நேரடியாகவே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், முறைகேடுக்கு வாய்ப்பு இருக்கும் என, கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News