அரசாங்கப் பணி என்பது நூற்றில் 80 சதவிகிதத்தினரின் கணவாக, லட்சியமாக உள்ளது. மத்திய அல்லது மாநில அரசுப் வேலை வாய்ப்பினை மக்கள் ஓர் வரமாகவே கருதுகின்றனர்.
இந்நிலையில், ஒரே நபர் மூன்று அரசுப் பணியில் 30 வருடம் பணியாற்றி சம்பளம் பெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.அரசாங்க வேலை
இன்றைய காலகட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது பல லட்சம் பேரின் இலக்காகும். பொதுவாக, மத்திய அல்லது மாநில அரசில் அறிவிக்கப்படும் சொற்ப எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பிற்குக் கூட பல ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு போட்டித்தேர்வுகள் எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மூன்று வேலை, 30 ஆண்டு ஊதியம்
போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இச்சூழ்நிலையில் ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக ஊதியமும் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
வட மாநில அவலம்
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராம் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே பெயர், ஒரே விலாசம்
வெவ்வேறு அரசுத்துறை பணிகளில் ஒரே பெயர், ஒரே விலாசம் இருந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் சந்திக்க உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், வெறும் பான் கார்டு, ஆதார் கார்டுடன் சுரேஷ் ராம் அவர்களை சென்று சந்தித்துள்ளார். இதனை அடுத்து, பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரச்சொல்லி அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தலைமறைவு
இதனால், உஷாரான சுரேஷ் ராம் திடீரென தலைமறைவாகியதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஒரு அரசு அதிகாரி, பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரி என கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கியுள்ள சுரேஷ் ராம், பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
விசாரணை
தொடர்ந்து, அவர் எப்படி இவ்வாறு வேலை வாங்கினார், மன்று அலுவலகத்திலும் ஒரு சேர எப்படி பணியாற்றியுள்ளார் என்ற விபரம் விசாரணைக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment