Friday, August 23, 2019

குரூப் 4 தேர்வு: தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 4 தேர்வை எழுதும் தேர்வர்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 தொகுதியில் 6 ஆயிரத்து 491 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள 301 தாலுகாக்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாராக உள்ளது. இந்த நுழைவுச்சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டைப் பெறலாம்.



சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், தேர்வுக் கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலம் அல்லது வங்கி), பரிவர்த்தனை எண் மற்றும் தேதி ஆகிய விவரங்களை தேர்வாணையத்துக்கு மின்னஞ்சல் (contacttnpsc@gmail.com) மூலமாக அனுப்ப வேண்டும்.

வரும் 28-ஆம் தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் மனுக்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது. நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


குரூப் 4 தேர்வு: தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்க: CLICK DOWNLOAD

Popular Feed

Recent Story

Featured News