Join THAMIZHKADAL WhatsApp Groups
12 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Allahabad Bank வங்கியில் 500 பணியிடங்களும், Bank of India வங்கியில் 899 பணியிடங்களும், Bank of Maharashtra வங்கியில் 350 பணியிடங்களும், Canara Bank வங்கியில் 500 பணியிடங்களும், Corporation Bank வங்கியில் 150 பணியிடங்களும், Indian Bank வங்கியில் 493 பணியிடங்களும், Oriental Bank of Commerce வங்கியில் 300 பணியிடங்களும், UCO Bank வங்கியில் 500 பணியிடங்களும், Union Bank of India வங்கியில் 644 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கவேண்டும்.
வயது வரம்பு:
20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைனில் நடத்தப்படும் முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdfஎன்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் 12, 13, 19, 20 தேதிகள்
முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019
பொது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2019