Join THAMIZHKADAL WhatsApp Groups
சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், MTS சர்வேயர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் போன்ற 26 வெவ்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்கள்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. MTS சர்வேயர்
2. எலக்ட்ரீசியன்
3. டர்னர்
4. ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்த காலியிடங்கள் = 88,585
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 25.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2019
தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.180
2. மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் - ரூ.350
குறிப்பு:
கணினி வழித்தேர்வுக்குப் பின்பு, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.180-யும், மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.250-யும் திரும்ப வழங்கப்படும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.23,852 முதல் அதிகபட்சமாக 56,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
குறிப்பு:
பணிகளுக்கேற்ப ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.
வயது வரம்பு: (25.07.2019 அன்றுக்குள்)
1. குறைந்தபட்ச வயது வரம்பு: அனைத்து பிரிவினருக்கும் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
2. அதிகபட்ச வயது வரம்பு: பொது / ஓபிசி பிரிவினராக இருந்தால் 33 வயது நிரம்பாதவராகவும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினராக இருந்தால்35 வயது நிரம்பாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக 8,10,12 ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் முதல் அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
குறிப்பு:
1. பணிகளுக்கேற்ப கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.
2. ஐடிஐ , டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், http://www.scclcil.in/- என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.scclcil.in/images/notifications/891a80efd4fd9ed6dc179b1cfaa5b6f8.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.