Wednesday, August 28, 2019

ஆடிப்பாடி அசத்தலாய் அறிவைப் புகட்டும் ஆசிரியர்


பள்ளி வாழ்க்கை பொதுவாகவே ஒரு அடம்பிடித்தலுடன் தொடங்குகிறது, போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நம் கல்வி தரத்தை சற்று நன்றாகவே உயர்த்திக்கொள்ள வேண்டும்.


அப்படியிருக்க அரசு பள்ளிகளில் கல்விதரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு இல்லை எனக் கருதுகின்றனர் இக்கால பெற்றோர்கள். அரசு பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளியை நோக்கி யாவரும் செல்கின்றனர்.இதனால் அரசும் ,ஆசிரியர்களும், புது[புது உத்திகளை கையாண்டு முயற்சி மேற்கொள்கின்றனர்.



இந்நிலையில் ஒடிச்சாவின் கோராபுட் மாவட்டத்தில் லம்தாபுட் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் தலைமை ஆசிரியராக பிரபுல்லா குமார் பாத்தி உள்ளார். இவர் தன் வித்தியாசமான அணுகுமுறையால் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்துகிறார்.

#WATCH: Prafulla Kumar Pathi, the in-charge headmaster of Lamtaput upper primary school of Odisha's Koraput district, teaches kids through songs, dance; says, "we've seen that the numbers of students attending schools have increased due to this method". pic.twitter.com/VnvN0jyLha

பாடல்கள்,நடனம் மூலமாக இவரது கல்வி கற்பிக்கும் முறை அமைந்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்கின்றனர் மேலும் இதனால் இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று இவர் கூறுகிறார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News