Friday, August 2, 2019

பெருங்காயத்தில் இருக்கும் நன்மைகள் என்னென்ன?..!

சாதரண பிரச்சனையில் இருந்து சிரம பிரச்சனைகள் வரை...!!நமது இல்லத்தில் இருக்கும் பெருங்காயத்தில் பால் பெருங்காயம் மற்றும் சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகையிலான பெருங்காயங்கள் உள்ளது. இதில் இருக்கும் காரம் மற்றும் கசப்பு தன்மையின் மூலமாக நரம்புகள் தூண்டப்பட்டு., உணவு ஜீரணம் மற்றும் பல பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்குகிறது.



பெரும்பாலான இல்லங்களில் சமைக்கும் சமயத்தில் உணவின் மனத்தை கூட்டுவதற்காக பூண்டுகள் மற்றும் வெங்காயத்துடன் இதனை சேர்ப்பது வழக்கம். பெருங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்களின் மூலமாக உடலின் உஷ்ணமானது அதிகரிக்கப்பட்டு., உணவை எளிதில் செரிக்க வைக்கிறது. மேலும்., சில நபர்களுக்கு இருக்கும் வயிறு உப்புதல் மற்றும் குடற்புழு பிரச்சனைக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் பிற சத்துக்களின் காரணமாக நரம்பு கோளாறுகள் மற்றும் மூளையின் இயல்பு இயக்கம் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது. பெருங்காய பொடியை பாத்திரத்தில் இளம் சூட்டுடன் வறுத்து எடுத்து சொத்தை பல் உள்ள இடத்தில் வைத்தால் பல் வலியானது உடனடியாக நீங்கும். ஆஸ்துமா பிரச்சனையால் மூச்சு விட சிரமத்துடன் இருக்கும் நபர்கள் பெருங்காயத்தை அனலில் சேர்த்து அந்த புகையை சுவாசிக்க உடனடியாக மூச்சு திணறல் பிரச்சனை நீங்கும்.


இதுமட்டுமல்லாது வாயு கோளாறுகள்., நரம்பு பிரச்சனைகள்., தலைவலி மற்றும் இருமல்., வயிற்று புழுக்கள் வெளியேற., நுரையீரல் பிரச்சனை மற்றும் சுவாச மண்டல பிரச்சனை., மார்பு வலி., மூச்சுக்குழல் அழற்சி போன்ற பிரச்சனைகளிலும்., உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்தும் நம்மை விலக்கி நமது உடலை பாதுகாக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News