Saturday, August 31, 2019

வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்

மதுரை: 'வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும்,' என மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் 14வது புத்தகத்திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.பபாசி தலைவர் வயிரவன் வரவேற்று பேசியதாவது: சென்னையில் 42 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடக்கிறது. நாட்டிலேயே டில்லி, கோல்கட்டாவிற்கு அடுத்தபடியாக சென்னை புத்தகத்திருவிழா அமைந்துள்ளது. மதுரையில் நடக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 250 அரங்குகள் அமைந்துள்ளன. 5 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. தினமும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடக்கின்றன என்றார்.

அமைச்சர் செல்லுார் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது: மதுரையில் கல்வி திருவிழாவாக இந்த புத்தக திருவிழா, கண்காட்சி அமைந்துள்ளன. வாசிப்பு, படிக்கிற பழக்கம் இருந்தால் மேன்மையான இடத்திற்கு உயர முடியும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என முன்னோர் கூறியுள்ளனர். கணினி புரட்சி இருந்தாலும் கூட வாசிப்பில் இருக்கும் ஆர்வம் வேறு எதிலும் இருக்காது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இஸ்ரோ விஞ்ஞானி போன்றோர் படித்ததால் உயர்ந்தனர்.கூகுள் நிர்வாக இயக்குனர் சுந்தர்பிச்சை மதுரையை சேர்ந்தவர். அவரிடம் படிப்பும், வாசிப்பும் இருந்ததால் இந்தளவுக்கு உயர முடிந்தது. வாசிப்பு பழக்கம் அறிவையும், மனத்தெளிவையும் தரும். அலைபேசியில் மாணவர்கள் மூழ்கி கிடக்காதவாறு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும்.



படிப்பதன் மூலம் எதை வேண்டுமானாலும் பெற முடியும். பணத்தால் மட்டுமே எதையும் பெற்று விட முடியாது. அழியாத செல்வம் கல்வி மட்டுமே. இளமையில் கல், ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என படிப்பதன் அவசியத்தை முன்னோர் விளக்கியுள்ளனர் என்றார்.புத்தக கண்காட்சியையும் அவர் திறந்து பார்வையிட்டார்.

எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, பபாசி துணைத் தலைவர் மயில்வேலன், ஒருங்கிணைப்பாளர் புருேஷாத்தமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பபாசி செயலர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.செப்., 9 ம் தேதி வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை புத்தகக் கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். 149 தமிழ், 67 ஆங்கிலம் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.



தினமும் மாலை 4:00 முதல் 6:30 மணி வரை கருத்தரங்கு நடக்கிறது. தினமும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு பத்து சதவீத தள்ளுபடி உண்டு.தினமலர் அரங்கில் தள்ளுபடி விலையில் புத்தகங்கள்புத்தக கண்காட்சியில் 55 பி, 55 சி அரங்கில் தினமலர் ஸ்டால் இடம் பெற்றுள்ளது. இதில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் வெளியான ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்து சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இங்கு தினமலர் நாளிதழுக்கான ஆண்டு சந்தாவிற்கு (ரூ.1999) பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News