Saturday, August 24, 2019

அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தோல்வி ஏன்?




திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் என்பதால் டெட் தேர்வில் அதிகமாக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையாமல் இருந்துள்ளனர். எனினும் தேவையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கூடுதல் தகுதி தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம். அவ்வாறு நியமிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை தெரிவித்துவிட்டால், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமாக அரசு நிர்ணயித்த 10 ஆயிரத்தை அரசே வழங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News