Friday, August 30, 2019

மாணவர் நிவாரண தொகை; இயக்குனரகம் வழிகாட்டல்

சென்னை: மாணவர்களுக்கான நிவாரண தொகை பெற, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வந்து செல்லும்போது ஏற்படும் விபத்துகளுக்கு, மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் உயிரிழந்தால், ஒரு லட்ச ரூபாய், பலத்த காயம் அடைந்தால், 50 ஆயிரம் மற்றும் சிறிய காயத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்கு, பள்ளிகளிடமிருந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News