Wednesday, August 28, 2019

டிப்ளமோ நர்சிங் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

செவிலியர் பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ நர்சிங்) ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பிஎஸ்சி நர்சிங் படிப்புகளைத் தவிர்த்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரம் பட்டயப் படிப்புகள் உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு நடத்துகிறது.


இந்த நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, https://www.tnhealth.org, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் செவிலியப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை பரிசீலனை செய்யப்பட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News