Wednesday, August 28, 2019

மின் பொறியாளர்களுக்கு சைபர் செக்யூரிட்டி பயிற்சி

சென்னை:&'சைபர் செக்யூரிட்டி&' எனப்படும், இணைய தள தாக்குதலை தடுப்பது குறித்து, மின் வாரிய பொறியாளர்களுக்கு, மத்திய, தகவல் தொழில்நுட்ப துறை விஞ்ஞானிகள், பயிற்சி அளித்தனர்.மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம்; துணை மின் நிலையங்களுக்கு மின்சாரத்தை எடுத்து வருவது; வினியோகம் செய்வது என, அனைத்து விபரங்களையும், தமிழக மின் வாரியம், கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறது. மின் கட்டணம் வசூல்; புதிய மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்டவையும், கம்ப்யூட்டரில் தான் பதிவு செய்யப்படுகின்றன.

மின் வாரியத்தின் வசம், 2.95 கோடி நுகர்வோர் விபரங்கள் உள்ளன.பயங்கரவாதிகள் உள்ளிட்ட, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், இணையதள தாக்குதல்களை நடத்தி, அரசு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இணைய சேவைகளை முடக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.வெளிநாடுகளில் இருந்தபடி, பிற நாடுகளின் கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை திருடும் கும்பலும், தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. எனவே, இணையதள தாக்குதலில் இருந்து, நம் கம்ப்யூட்டர் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன்படி, மத்திய, தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும்,'இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம்' நிறுவனத்தின் விஞ்ஞானிகள், டில்லியில் இருந்தபடி, தமிழக மின் வாரிய அதிகாரிகளுக்கு, நேற்று, &'வீடியோ கான்பரன்சிங்&' வாயிலாக பயிற்சி அளித்தனர்.சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த, அந்த பயிற்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, கம்ப்யூட்டர் பிரிவை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News