Thursday, August 1, 2019

டிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான தேர்வு!



தமிழக அரசின் கீழ் செயல்படும் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் என்ற பதவிக்கு 42 காலிப்பணியிடங்களுக்கு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளது.
பணி:
அசிஸ்டெண்ட் டூரிஸ்ட் ஆபீசர் (கிரேடு - II)

மொத்த காலியிடங்கள்: 42



முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.08.2019

தேர்வு நடைபெறும் தேதி:
முதல் தாள் (டிராவல் & டூரிசம்): 29.09.2019 (காலை)
இரண்டாம் தாள் (ஜெனரல் ஸ்டடிஸ்): 29.09.2019 (மதியம்)

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
நிரந்தரப்பதிவுக்கான கட்டணம்: ரூ.150
தேர்வுக்கான கட்டணம்: ரூ.100



வயது வரம்பு:
1. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 58 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் தவிர மற்ற பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.







கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, டிராவல் & டூரிசம் என்ற துறையில் இளங்கலை டிகிரி பயின்றவராகவோ அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் டிப்ளமோ இன் டூரிசம் படிப்பை பயின்றவராகவோ இருத்தல் வேண்டும். அத்துடன் கூடுதலாக தமிழக அரசின் கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வில் தேர்ச்சி அவசியம்.

குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை கல்லூரியில் பயின்று இருத்தல் முக்கியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://tnpscexams.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.



மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News