நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள் ஆகும். நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், சர்க்கரை அளவை குறைக்கவும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
காய்கறிகளில் கத்தரிக்காய் நம் உடலை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுகிறது. கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். அனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள்:-
நாக்கில் உண்டாகும் அலர்ஜியை கட்டுபடுத்த கத்தரிக்காய் பயன்படுகிறது.
வாதம், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், சளி, பித்தம்,இருமல், மலச்சிக்கல், போன்ற நோய்களை சரி செய்ய உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் பாதிப்பு வராமல் தடுக்கிறது.
பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடம்பில் சொறி சிரங்கு, அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் கத்தரிக்கையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
கத்தரிக்காயில் உள்ள சூடு இந்நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
முற்றிய கத்தரிக்கைகளை தவிர்த்து பிஞ்சு கத்தரிக்காய்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.
கத்தரிக்காய் பசியுணர்வை ஏற்படுத்தி உடலுக்கு வலுசேர்க்கிறது.
அதிக விதைகள் உள்ள கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அந்த முற்றிய விதைகள் அரிப்பை ஏற்படுத்தும்.
இரத்தத்தை சுத்திகரிக்க கத்தரிக்காய் பயன்படுகிறது.
கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது.
கத்தரிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
No comments:
Post a Comment