Join THAMIZHKADAL WhatsApp Groups
திண்டுக்கல்லில் மாணவர்களை பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போல் சில பள்ளிகளில் மாணவர்கள் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கோ, அருகிலுள்ள கடைகளுக்கு சென்றோ உணவு அருந்துகின்றனர். வெளியாட்களால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி மதிய உணவை பள்ளிக்கு கொண்டு வர அறிவுறுத்த வேண்டும். பள்ளி நேரத்தில் மாணவர்களை எக்காரணத்திற்காகவும் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. பள்ளி துவங்கியது முதல் முடியும் வரை மாணவர்கள் பள்ளியில் தான் இருக்க வேண்டும். வகுப்பு அல்லது பாட வேளை துவங்கும் முன்போ, பின்போ மாணவர் வகுப்பில் இருப்பதை வருகை பதிவின் மூலம் உறுதி செய்ய வேண்டும். மதிய உணவை கொண்டு வராத மாணவர்களுக்கு, உணவை கொடுத்து விட பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தினமும் சத்துணவு வழங்குவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.