முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்த உள்ளது.
இளநிலை பொறியியல் படிப்புடன், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அல்லது பட்டதாரி நுண்ணறி (கேட்) தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி வரும் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.annauniv.edu/tanca2018 என்ற இணையதளம் மூலம் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.