Sunday, August 4, 2019

இந்த மாதம் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை., வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!!.


பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஞாயிற்று கிழமைகள் மற்றும் மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதம் சுதந்திர தினம், பக்ரீத், கிருஷ்ன ஜெயந்தி போன்ற பண்டிகைகள் உள்ளதால் கூடுதல் விடுமுறைகள் உள்ளன. இதனால்



இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன.

அதன்படி, இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமையான ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறையாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வங்கிகள் விடுமுறை உள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமைக்குப் பின் வரும் திங்கள் கிழமையாக என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆகஸ்ட் 10, 11, 12 தமிழகத்தில் வங்கிகள் இயங்காது.



அடுத்த இரு நாட்களிலேயே, ஆகஸ்ட் 15 ஆம் தேதி (வியாழன்) சுதந்திர தினம் வருவதால் அன்றும் வங்கிகள் விடுமுறை. அதனை அடுத்து, ஆகஸ்ட் 24 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அன்றைய தினம் ஏற்கனவே, நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பதால், வங்கிகள் இயங்காது

Popular Feed

Recent Story

Featured News