Saturday, August 10, 2019

கல்லூரி மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவித் தொகையை புதிதாகப் பெறவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் புதுப்பிக்கவும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், கல்வி உதவித் தொகை திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளநிலை பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கும், முதுநிலை பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ,. 20,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கும் வழங்கப்படும்.


இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பதோடு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். இதற்கு ஆன்- லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News