Friday, August 23, 2019

விடைத்தாள்களில் குழப்பம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த வெற்றி சதவிகிதம் !

ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தேர்வு டெட் ஆகும்.இந்த தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அரசாங்க ஆசிரியர் பணி வழங்கப்படும்.தற்பொழுது பொறியியல் படித்து பல்வேறு இளைஞர்கள் வேலை கிடைக்காமல் இருக்கின்ற நிலையில் அடுத்த அனைவரும் ஆசிரியர்பணியைக் குறி வைத்து ஆசிரியர் பணிக்காக போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 நடைபெற்றதுஇந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர்.மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நடந்த இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 9 ம் தேதி நடந்தது. மொத்தம் 3,79,733 பேர் தேர்வு எழுதினர். இரண்டு தாள்களாக இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.



இந்நிலையில் 2 ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று (ஆக.,21) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்த முதல் தாளிலும், 6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த 2 ம் தாளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு விடைகள் OMR தாளில் பெறப்பட்டுள்ளது. விடைத்திருத்தம் நடைபெறும் போது, பலரது OMR விடைத்தாள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் ஷேட் (Shade) செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஷேட் செய்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது.

இதே போல், சிலரது விடைத்தாள்களில் அவர்களது வினாத்தாள் எண் குறிப்பிடப்படவில்லை. அத்தகையவர்களின் விடைத்தாள்களும் நிராகரிக்கப் பட்டுள்ளது. ஒரு சிலர் சீரியல் நம்பரை எழுதியுள்ளனர். ஆனால், OMR வட்டத்திற்குள் ஷேட் செய்து காட்டவில்லை. சிலர் நிறைய வட்டங்களில் ஷேட் செய்துள்ளனர். இது போன்ற விண்ணப்பதாரர்களில், அவர்கள் பேனாவில் எழுதியுள்ள சீரியல் நம்பரே கருத்தில் கொள்ளப்படும்.



தேர்வு மொழியை ஒரு சிலர் குறிப்பிடவே இல்லை. அவர்களுக்கு, தேர்வு விண்ணப்பிக்கும் போது சொன்ன மொழியே கருத்தில் கொள்ளப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் மொழி கொடுக்காமல் இருந்தால், அவர்களின் வினாத்தாள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News