Friday, August 9, 2019

உடலில் இன்றியமையாத உறுப்பு கண்னை பாதுகாப்பதற்கு வழி


மனித உடலில் கண் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இத்தகைய அத்தியாவசியத்தை கொண்ட கண்ணிற்கு ஆபத்து விளைவிக்கும் சில முக்கிய குறிப்பை இன்று பார்ப்போம். கண்ணீருக்கு கெடுதல் என்று வந்துவிட்டாலே முக்கிய இடத்தில் முதலில் தொலைக்காட்சியும் அலைபேசியும் தான் அமையும். தொலைக்காட்சியை முழுவதும் தவிர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு பார்ப்பதை குறைத்துக் கொள்ளுதல் கண்ணின் ஆயுளை நீடிக்கும்.

மேலும் கையில் அலைபேசியை பூட்டுப் போட்டு வைத்துக் கொண்டிருப்பது போல் உலாவும் இதை முழுவதும் தவிர்ப்பது இயலாத காரியம். இருந்தாலும் இதற்கெனவே சில முக்கிய செயலிகள் நைட் ஸ்க்ரின் போன்றவை ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். இது கண்ணை முழுவதுமாக பாதுகாக்க விட்டாலும் 50% பாதுகாக்கும். மேலும் வைட்டமின் A நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொண்டால் கண்கள் மிக ஆரோக்கியமாக இருக்கும். கேரட் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் மீன் போன்றவை கண்களை ஆரோக்கியமாக வைக்க சிறந்த உணவுப் பொருளாகும் .

Popular Feed

Recent Story

Featured News