Wednesday, August 28, 2019

இலவச, லேப் டாப் வேண்டும்; ஓவிய ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது போல், தங்களுக்கும் இலவச, &'லேப் டாப்&' கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என, ஓவிய ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப் டாப் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 படிக்கும் போதே, லேப் டாப் வழங்கப்படுகிறது. அதேபோல, பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள், ஹைடெக் ஆய்வகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

அதனால், நவீன தொழில்நுட்பத்தை கற்று தரவும், பாட புத்தககங்களில் உள்ள,'க்யூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி, பாடம் நடத்தவும், முதுநிலை ஆசிரியர்களுக்கு, இலவச லேப் டாப் வழங்கப்படுகிறது.இந்நிலையில், ஓவிய ஆசிரியர்களும், தங்களுக்கு இலவச, லேப் டாப் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:ஓவிய பாடங்கள் நடத்துவதற்கு, பல வகை ஓவியங்களை, மாணவர்களுக்கு காட்ட வேண்டியுள்ளது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஓவிய முறைகளில் அதிக மாற்றங்கள் வந்து விட்டன. கிராபிக்ஸ் ஓவியங்களும் பிரபலமாகின்றன.

சமீப கால ஓவியங்களுடன், பழைய ஓவிய வரைதலையும் ஒப்பிட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது; இதற்கு, கணினி அவசியம். கணினியிலேயே ஓவியம் வரையவும், மாணவர்களுக்கு கற்று தர வேண்டும். எனவே, முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியது போல், ஓவிய ஆசிரியர்களுக்கும், இலவச, லேப் டாப் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News