டி இ டி - ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் படும் என்று ஏபிவிபி - மாணவர் அமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலைடி இ டி தேர்வு முறைகேடு தொடர்பாக நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கத்திடம் இது குறித்த கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில் நெல்லை மாவட்ட ஏபிவிபி ஒருங்கிணைப்பாளர் கோபிகங்காதரன், இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், அலுவலக செயலாளர் ராகுல், பல்கலைகழக தலைவர் வெங்கடேஷ், பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிசந்திரன், மண்டல அமைப்பு செயலாளர் பிருத்திவிராஜன் மற்றும் மாணவ பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஏபிவிபி., அளித்த மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பது…
மதிப்புக்குரிய ஆட்சித் தலைவர் அவர்களுக்கு…
கோரிக்கைகள் : 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8தேதி மற்றும் 9 தேதி அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ABVP க்கு புகார்கள் வருகின்றன.
காரணங்கள் : கடந்த முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இன்றுவரை அரசாணை வழங்கப்பட உள்ள சூழ்நிலையில் எதற்காக 2019ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது என்பதற்கு உரிய காரணத்தை அரசு வெளியிட வேண்டும் .
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அந்த தேர்வினுடைய கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்பதும் அதன் விளைவாக தேர்வினுடைய முடிவுகளானது இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த சதவீதம் உள்ளது; எனவே இந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு கட்டணம் இன்றி மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
கடந்த முறை நடைபெற்ற அந்த தேர்வினுடைய 20,000 பேருக்கு அரசு ஆணை வழங்கப் படாத சூழலில் இந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட வேண்டிய காரணங்களை தெளிவாக வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஏபிவிபி கேட்டுக்கொள்கிறது… என்று மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் C.விக்னேஷ் மூலம் மனு அளிக்கப் பட்டது.
No comments:
Post a Comment